’’என் கடந்த நாட்களைத் தேடிப் பார்க்கிறேன்…’’

நலம் விரும்பிக்கு,

என் நண்பர்களைவிட எதிரிகளையும் விமர்சிப்பவர்களையும் தான் நான் அதிகமாக நேசிக்கிறேன். என் முதற்றானது முதல் ஈற்றயளடிபோல் ஈரான தவறுகளையும் அவர்களே எனக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.

நான் ஆகாயத்தையே என் சொற்களால் கட்டிப்போட வேண்டுமெனத் தவம் கிடக்கிறேன்.

என் ஆசா பாசங்களால் என் கடந்த காலங்களின் கால்களையெ குட்டிபோட்ட பூனைபோலச் சுற்றி வருகிறது. எதுஎதற்கோ யோசித்து மூளையின் நரம்புகள் புடைத்துவிடுவதுபோலச் சிந்திக்கிறேன் நான். என் கற்பனைகள் எல்லாம் கடந்த காலத்தின் நீட்சிகள்., நான் யோசிப்பது எல்லாம் இயற்கைத்தாயின் தீட்சண்யப் பார்வையின் திருக்கொடைகள்.

எங்கெங்குச் சென்றாலும் கால்களால் நடந்துசென்று போகும் போது பார்த்த அனுபவங்களையே நான் என் எழுத்தின்பலமாகப் பார்க்கிறேன். என் திறமையின் பெட்டகமாக எண்ணிக்கொள்கிறேன்.

மாற்றத்தை நான் மனதாற வரவேற்கிறேன். அதற்காக மாற்றத்தினைச் செயற்கையாய் நிகழ்த்திக்காண்பித்து ஒருநாள் கூத்துக்காக மீசையை மழிக்க எனக்கு உடன்பாடில்லை எனக்கு.

எனக்கு சிங்கத்தின் மீசையில் உட்காரும்  ஈயைப் போல துணுவும் வேண்டுமென கவித்தாயிடம் கேட்டுக்கொள்கிறேன். சிங்கம் என்றும் காட்டுராஜா என்றும் தெரியாமலே சிலநாட்கள் வாழும் அஃறினைபோல் என் எழுத்துகளும், பாடுபொருட்களும் எதைக்குறித்தும் கவலைபடக்கூடாது என்பதில் நான் அதிகம் அக்கறைகொள்ளுகிறேன்.

நானும் மனிதந்தானே. இயல்பான சில மறதிகள் என் மனக்கத்திலும் உண்டு. ஆனால் சில அதிர்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் மட்டும் எந்தக் கால அழிப்பானாலும் என் மனதிலுந்து ஒருநாளும் அழிக்கமுடியாது; அதற்கு நான் ஒருபோதும் அனுமதி கொடுக்கப் போவதும் கிடையாது.

நான் மீண்டும் சொல்கிறேன்; காலத்தின் கணக்கில் என் வரவும் செலவும் போக மிச்சமிருப்பது என் எழுத்துகள் மட்டும்தான் …

நான் அந்தக் கடந்த காலத்தின் மலையடிவாரத்தில் என் எழுத்துகடையை விரிக்கிறேன்…

அதில் நானே முதலாளே! நானே தொழிலாளியும்கூட.

உங்களுக்கு இது குழப்பலாம் ஆனால் நீதிபதியின் முன் சாட்சி சொல்லுபவனைபோல்  நான் சொன்னதெல்லாம் உண்மையே தவிர வேறொன்றுமில்லை.

27-10-20

சினோஜ்

Published by Sin ennum Sevagan - சின்‌ எனும்‌ சீவகன்

Articles... poems... .news.... criticism .... book review...

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started