ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….

நலம் விம்பிக்கு,

#copyright

அதிகமான ஆசைகள் கொண்ட என் மனதுக்கு எதோவதொன்று எனக்கு நடக்கும் முன்பாகவே அதைப்பற்றிய நிகழ்வுகளும் சிந்தைகளும் என் தீர்க்கதரிசனப் பார்வையின் கவனத்திற்கு வருகிறது.

என்னை உற்றுநோக்கு ஆராய்கிற பலருக்கும் என்னைப் பற்றித்தெரியாது. நான் அவர்களைவிடவும் அவர்களையே அதிகம் உற்றுநோக்கி என் படைப்புக்கான அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறேன் என்று.

காலச் சுவற்றின் விரிசல் விழும்போது அதற்கு என் கவிதைவரிகளால் குழைத்த கருத்துப்பட்டி தேய்க்காமல்போனால் அந்தக்க் காலம் என்னை இப்போதும், எப்போதும் முப்போதும் மன்னிக்காது.

நான் நட்சத்திரங்களை வெறுமனே எண்ணிக்கொண்டு இரவுபொழுதை வீணடிப்பதாக நீங்கள் கருதலாம். அது என்னப் பற்றிய உங்கள் கருத்து என்றே வைத்துக்கொள்ளலாம்…ஆனால் நான் நான் கண்ட மனிதர்களின் சாயல்களை அந்த நட்சத்திரங்களின் முகத்திலும் என் லட்சிய முகவரியை அது கொடுக்கின்ற ஒளியிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய முற்படும்போதுதான் என்னைக்குறித்த உண்மையை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தறிவீர்கள்…

நான் காற்றோடு பேசி அதன் மௌனத்தைப் பலாத்காரமாய்க் கலைத்து என் கவிதைக்கான் கரு ஆக்கிக்கொள்பவன்.

விண்ணில் சுழலும் கோள்களை எல்லாம் நான் காணும் கனவுகளுக்கான எஞ்சினாக்கிக்கொண்டு என் நித்தியரையான இரவுகளில் நான் இன்னும் சுகித்திருக்கிறேன்.

மட்டமற்ற மகிழ்ச்சியாக நான் கருதுவது சகமனிதப் புத்தகங்களைத்தான். அவர்களின் ஒருதுளிப் பேச்சும் என் எழுத்தாக்கத்தின் அற்புத மை.

நான் கற்பகத்தருவாகக் கருதுவது இந்தச் சமுதாயத்தைத்தான்.

அது எனக்களித்துள்ள அனுபவமும் அளவில்லா மகிழ்ச்சிக்கும் முன் கொடுத்த துன்பங்களும் என்னை எரித்த சாம்பல் துளிகளிலும் கூட இரவு நேர மின்விளக்குகளைப் போல மின்னித் தெரியும்.

தேவைப்படாத என் காத்திரமான சொற்களை விழுங்கிக்கொண்டு மறைகிற அனகோண்டா மேகங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது யாதெனில்: ‘’நீ கடல் நீரென என் சொற்களை உறிஞ்சிக்கொண்டாலும் என் சக்திகாந்த எழுத்துகளே உன்னுடலில் ஓடும் ரத்தசுழற்சி என்பது எனக்கும் உனக்கும் மட்டுமே தெரியும்.

நானிதை யாரிடமும் கூறிப் பெருமிதப்படமாட்டேன்..

எனக்குச் சொல்லிக்காட்டும்பழக்கமில்லை என்பதால் ஆனால் நான் எழுத்தாளன் என்பதால் என் மனம் ஒரு உளறுவாய்…என் கை மறுத்தாலும் மசக்கை பெண்போல அது வாந்தி எடுத்துவிட்டது இந்தக் காகிதக்குவளையில்.

நானென்ன செய்ய முடியும் ..?’’

copyright

01-11-2@2@

சினோஜ்

🙂

Published by Sin ennum Sevagan - சின்‌ எனும்‌ சீவகன்

Articles... poems... .news.... criticism .... book review...

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started