கானக்குயிலும் சூறைப்புயலும்!

அத்தியாயம்-1

என் கானத்துக் குயில் ஒரு புயல்காற்றை எதிர்த்து மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையைப் பிடித்து மழையில் நனைத்து, உடல் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. அதைப் பார்த்த புயல் அதனிடம்  தொடுக்கும் கேள்விகளும், அதற்குக் குயில் உரைக்கும் பதிகளும் எனது சொந்தக் கற்பனை!ஒரு குறுங்காவியம்…இது! இதைப் புதுக்கவிதையாகவும் கொள்ளலாம் வசன கவிதையாகவும் கொள்ளலாம்!

#copyright

சூறைக்காற்று :

நான் இத்தனைக் கொடூரத்தில்

காற்றடித்தும் நீ

இப்படி உயிரை

ஊசலாடிக்கொண்டிருக்கிறாயே..

இதுதேவையா???

இந்த அவதி இனியும் வேண்டுமா??

கானக்குயில்:

 நான் என்ன  ஜென்மம் என்று

எதையும் நான் நினைக்கவில்லை….

என் ஆயுளின்

நாட்களே எனக்குப் போதும்.

ஆனால் என் ஆயுள் கண்டவன்

கையில் கொத்தடிமைப்பட்டுச்

சாக எனக்கு விருப்பமில்லை..

என் சாவை அடுத்தவர் தீர்மானிக்க முடியாது!

கடவுளைப் போல் அதை

நானே தீர்மானிப்பேன்!

சூறைக்காற்று :

 நீ எதற்குத் தேவையில்லாததைப்

பேசுகிறாய்…செய்கிறாய்..???

கானக்குயில்:

நீங்கள் தேவையானதென்று

நினைத்துப் பேசும் எதுவும்

எனக்குத் தேவையிலாதவையாகத் தெரியலாம்!

அதேபோல் உங்களுக்குத் தேவைப்படும்

செயலை நீங்கள் செய்வது

எனக்குத் தேவையில்லாததாகத் தோன்றலாம்.

இது வாழ்க்கையில் முரண்பாடுடைய கேள்வி.

ஆனால் இதற்குப் பக்குவம் வாய்ந்தவர்களால்

மட்டுமே நல்ல பதிலுரைக்க முடியும்!

நான் உன்னைக் குறைசொல்லவில்லை..

உன் வேலை அடுத்தவர்களின்

வாழ்க்கையில் விளையாட்டுக் காட்டுவதுதானே!!!

சூறைக்காற்று :  

உனக்கு எதற்கு இந்த

வீண்விபரீதமான வேலை??

நான் நினைத்தால் உன்னை இப்போதே…..

கானக்குயில்:  

என் சாவு உங்கள் கையில் உள்ளது

 என்று நீங்கள் மறுபடியும்

என்னைக் குறுகு விசாரணை செய்வதுபோல்

பயமுறுத்தப் பார்க்கலாம்…

நான் வானில் பறக்க

என் தாய் எனக்குக் கற்றுத்தரும்போதே

பூமியைத் தூசாகவும்

உயிரை இறக்கயின் மயிராகவும்

பார்க்கத் தொடங்கிவிட்ட

எனக்கு உன் மிரட்டல் தொனியின் மீது

அச்சமில்லை.

நான் மரணத்தை வென்றதால்தான்

இப்போதும் மரணத்தை எதிர்த்து

என் பலன் கொண்ட மட்டும் போரிடுகிறேன்!!

உனக்கு என்னைப் பார்த்து

பயமாக இருந்தால் விலகிக்கொள்!

சூறைக்காற்று :

 நீ கர்வத்தில் பேசுகிறாய்…

உங்களுக்கு உள்ள உரிமைகளைச்

சரிவரச் செய்யும்போது

அதை நானும் செய்வதில்

உங்களுக்கு என்ன வலிக்கிறது..?

எனப் பதிலுக்கு நானும்

நாலு கேள்விகள் கேட்கலாம்

என்று நினைத்தாலும்

அப்படிப் பதிலுக்குப் பதிலுரைத்துப்

பல்லுக்குப் பல்

சொல்லுக்குச் சொல்

பேசுவது எந்த விவாதத்தையும்

முடிவுக்குக் கொண்டுவராதென்பதால்

அதை நான் விட்டொழிக்கிறேன்…

சூறைக்காற்று :

அதெப்படி வந்தது

உனக்கு இத்தனை நெஞ்சுறுதி??

கானக்குயில்:

யரேனும் எதிர்வாதம் புரிந்து

என் உருவத்தை எள்ளி நகைத்து

 மடக்க நினைத்தால்….

’’நதி கூட ஊற்றிலிருந்து கிளம்பிக்

கடல்கூடத்திற்குச் சென்று

ஆழ்கடலில் பள்ளிகொள்கிறதே….

அதுபோல் நானிருந்தால் என்ன தவறு?

என்று ஒரு சூட்டிப்பான பதிலை

அள்ளித் தெளிக்கிறேன்…’’

சூறைக்காற்று :

 உனக்கெல்லாம் எப்படி

வாய்த்தது இந்த

அளப்பரிய ஆற்றல்??

கானக்குயில்:

 யாரேனும் என் மன உறுதியைக் குறித்து

அவரது மனதினுள்

நினைத்துப் பொருமினால்….

அவர்களுக்கு எனது பதிலிது:

’’அவரவர் கைகள், சாப்பிடவும்

துணி உடுக்கவும் பயன்படுவது போல்

எனக்கும் இது இயல்பானதொன்றுதான்!

இதுகுறித்து யாரும் வாய்பிளக்கத் தேவையில்லை

’’சரியாதொன்றைச் தவறானஒருவர்

செய்தாலும் அது சரிதான்!

ஆனால், தவறான ஒன்றை

சரியானதென்று நினைத்துச்

சரியான ஒருவர் செய்தாலும் அதுதவறுதான்.’’

என்று நான் பகுட்டில் குத்துவதுபோல்

படக்கெனப் பதிலுரைப்பேன்.’’

சூறைக்காற்று :

இப்போது நீ என்ன செய்கிறாய் ??

இந்தக் கேள்வியை உங்களைப் போல்

யாரேனும் என்னைக் கேட்டால்…

’’பல் வலுக்கும் போது புடலகாய் கூட்டும்

ஒருவர் கன்னத்தில் அறையும்போது

தர்பூசனி பழமுமா சாப்பிடமுடியும்?

நான் ஒரு சுயம்பு

என்னில் விழும் பதில்களுக்கு

என் மனசே ரெடியாக

அப்ஜெக்டிவ் டைவ் கேள்விக்கான

பதில்களைப்போல்

மூன்று பதில்களை எப்பவும்

தயார் நிலையில் வைத்துள்ளது….

                                                        உரையாடல் தொடரும்…

#copyright

சினோஜ்                         

Published by Sin ennum Sevagan - சின்‌ எனும்‌ சீவகன்

Articles... poems... .news.... criticism .... book review...

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started